கோவை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

கோவை ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: வட மாநிலத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர். பி. ஏப்) தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று (பிப்.9) கோவை ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்தான் அந்த கஞ்சாவை கடத்தி வந்ததவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மருதமலையை சேர்ந்த கோவிந்தன் (வயது55) என்பது தெரியவந்தது. அவர் எந்த பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...