கோவையில் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு

காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்டு, ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.


கோவை: கோவை, காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்ட "அருள்மிகு ஶ்ரீ கண்ணனுர் மாரியம்மன் கோவிலுக்கு" மாற்று இடம் ஒதுக்க வேண்டுமென தமிழக சட்ட சபையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருந்தார். அதனை, தொடர்ந்து இன்று (பிப்.10) ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.



பின்னர் கோவை தெற்கு தொகுதி 64-வது வார்டு மசால் லே அவுட் வீதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அங்குள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டபட்டு வரும் மருத்துவ கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின் மருத்துவமனையின் புதிய வசதிகள் மற்றும் தேவைகளை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.



மேலும் கோவை தெற்கு தொகுதி 69-வது வார்டு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள அண்ணா தினசரி மார்கெட்டில் புதிதாக வணிக வளாகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...