31வது பெடரேசன் கூடைப்பந்து கோப்பை: இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் வெற்றி.

31வது பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் கூடைப்பந்து இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றின.

31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்ற தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் கடந்த 22 – ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இறுதி  போட்டியில் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைபபற்றினர். 



பெண்கள் இறுதி சுற்றுப் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து விளையாடிது. இதில் சத்தீஸ்கர் அணி 77 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் பூனம் சதுர்வேதி 28 புள்ளிகளும், சரன்ஜித் கவுர் 27 புள்ளிகளும் எடுத்தனர்.எதிர்த்து விளையாடிய தென்னக இரயில்வே அணி 67 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் பி.அனிதா 23 புள்ளிகளும், எஸ்.நீனா 17 புள்ளிகளும் பெற்றனர்.  


ஆண்கள் இறுதி சுற்று போட்டியில் ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 55 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் அம்ரித்பால் சிங் 17 புள்ளிகளும், விசேஷ் பிரிகுவான்சி 17 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 52 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்தது.இதன் வீரர்கள் பிரசன்னா வெங்கடேஷ் 14 புள்ளிகளும்,பிரதம் சிங் 13 புள்ளிகளும் எடுத்தனர்.  


முன்னதாக இன்று காலை நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டிகளில் பெண்கள் அணியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் மேற்கு வங்க அணி 81 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்களைகள் சல்மா தேவி 22 புள்ளிகளும் மது குமாரி 20 புள்ளிகளும் எடுத்தனர்.எதிர்த்து விளையாடிய தமிழ்நாடு அணி 52 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் வர்ஷநந்தினி 13 புள்ளிகளும் ஸ்ரீவித்யா சேகர் 12 புள்ளிகளும் பெற்றனர். 


தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் அணியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 85 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் ஜோகிந்தர் சிங் 33 புள்ளிகளும், நரேந்தர் 30 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 79 புள்ளிகள் பெற்றனர்.இறுதிப் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் வருமான வரி துறை ஆணையாளர் பி.செல்வகனேஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஓஎன்ஜிசி அணி மற்றும் சத்தீஸ்கர் அணிக்கு வெற்றி கோப்பையை பரிசாக வழங்கினார். 



மேலும் விழாவில்  அரைஸ் பவுண்டேசன், நிறுவனர் மற்றும் 31வது பெடரேசன் கோப்பை தேசிய கூடைப்பந்து சேம்பியன்சிப் போட்டி ஏற்பாட்டு தலைவருமான ஆதவ் அர்ஜுன், இந்திய கூடைப்பந்து கழக பொது செயலாளர் சந்தர் முகி சர்மா, தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவரும் 31வது பெடரேசன் கோப்பை தேசிய கூடைப்பந்து சேம்பியன்சிப் போட்டி ஏற்பாட்டு தலைவருமான  ராஜ் சத்யன், மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழக முதுநிலை துணைத் தலைவர் செந்தில் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கபட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...