சின்னியம்பாளையத்தில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம்

மின்சார கட்டண உயர்வு அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக பாதித்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி இருப்பது மனுக்கள் மூலம் தெரிவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


கோவை: அதிமுக சார்பில் கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கான கருத்துகேட்பு ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைசெல்வன்,கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, விவசாயிகள், தொழில்துறையினர், மற்றும் பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாங்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட விவசாய அமைப்புகள், தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியோர்களை சந்திக்க விரும்புவதாகவும், இதுவரை மாநில, தேசிய கட்சிகள் அறையில் அமர்ந்து தரவுகளை கேட்டு வாங்கி தேர்தல் அறிக்கை தயாரிப்பது வழக்கமாக உள்ள நிலையில், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளை அழைத்து நேரடியாக கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தால் தமிழக மக்களின் எண்ணங்களை முழுதாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பினார்.

தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். தற்போது கோவை மண்டலம் வந்துள்ளோம். மேலும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பட்டத்தை கோவை இழந்து விடுமோ, திமுக ஆட்சியால் அழிந்து விடுமோ என்ற நிலையில் உள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பல்வேறு தொழில் அமைப்புகள், விவசாயிகள் அமைப்பு, மீனவர்கள் அமைப்பு, கைத்தறி நெசவாளர்கள், மோட்டார் தொழிற்சங்கம் என பல்வேறு தரப்பினர் கொடுத்த கோரிக்கைகளை ஆய்வு செய்து பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்த்து ஆக்கப்பூர்வமான, வலிமை மிக்க தேர்தல் அறிக்கையாக அதிமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். நூற்றுக்கணக்கான சங்கங்கள் அமைப்புகளை தங்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாக சந்தித்துள்ளோம்.

அதிமுக, எடப்பாடி மீதுள்ள நம்பிக்கையை மக்கள் ஆர்வமாக வந்த மனுக்கள் அளித்ததன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஜி.எஸ்.டி., மின்வெட்டு, சொத்து வரி, மீனவர் பிரச்னை பிரதானமாக சொன்னாலும், மின்சார கட்டண உயர்வு அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக பாதித்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி இருப்பது மனுக்கள் மூலம் தெரிகிறது.

திமுக ஆட்சியில் அனைத்து தொழில்களும் நசுக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு பிரச்னை உள்ளதா என்பது மனுக்கள் மூலம் தெரிவதுடன், ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்துள்ளது. பயனுள்ள தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிடும். அதன் மூலம் மக்களுக்கு விடிவு ஏற்படும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...