ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை - நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவிப்பு

ஆழியாறு புதிய பாசனம் 'ஆ' மண்டல பாசனத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக (பிப்.12 - மார்ச்.23) வரை 40 நாட்களில் தகுந்த இடைவெளி விட்டு 19 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 610 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.


கோவை: நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று (பிப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு புதிய பாசனம் 'ஆ' மண்டல பாசனத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக (பிப்.12 - மார்ச்.23) வரை 40 நாட்களில் தகுந்த இடைவெளி விட்டு 19 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 610 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22332 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று (பிப்.10) வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு 2½ சுற்றுகள் (12.2.2024) முதல் (22.5.2024) வரை 100 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 5000 மில்லியன் கன அடிக்கு மீகாமல் நீர் இழப்பு உட்பட தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...