ஆர்.எஸ்.புரம் பகுதியில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்

குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் சிவசுப்ரமணியம் சாலையில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேற்று (பிப்.10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உடன் உதவி ஆணையர் சந்தியா, மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சலைத் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...