கோவை மாவட்ட ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்க காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் அழைப்பு

மாவட்ட ஊா்க்காவல் படையில், 50 ஆண் ஊா்க்காவல் படையினருக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக, விருப்பமுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் நேற்று (பிப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஊா்க்காவல் படையில், 50 ஆண் ஊா்க்காவல் படையினருக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக, விருப்பமுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பத்தை காவல் நிலையங்கள், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகங்களில் பிப்ரவரி 11 முதல் 17 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களது எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதற்கான பெட்டியிலோ பிப்ரவரி 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...