வேடப்பட்டியில் மதுபோதையில் தகராறு செய்த பூசாரி அடித்துக் கொலை - மனைவி மற்றும் மகன் கைது

வீட்டிற்கு வந்த பூசாரி தங்கவேல் மதுபோதையில் மகனை கட்டையால் அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்து கட்டையை பிடுங்கிய மகன் தந்தையின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். மகனுடன் சேர்ந்து தாய் வஞ்சிக்கொடியும் மம்மட்டியால் தங்கவேலை தாக்கி உள்ளார். இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (58). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் தலைமை பூசாரியாக பணி செய்து வருகிறார். இவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி மகனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு, வீட்டுக்குச் சென்றவர், மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கும் அவரது மகன் வாசுதேவன்(29).

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மகனை கட்டையால் அடிக்க தங்கவேல் முற்பட்டுள்ளார்.

அப்போது அவரிடம் இருந்து கட்டையை பிடுங்கிய மகன் தந்தையின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். மேலும் மகனுடன் சேர்ந்து தாய் வஞ்சிக்கொடியும்

(49) அருகில் இருந்த மம்மட்டியால் தங்கவேலை தாக்கி உள்ளார்.இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்துஅக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் தங்கராஜ் உடலை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின் வஞ்சிக்கொடி மற்றும் வாசுதேவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் தங்கவேலைத் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து மேற்படி நபர்கள் இருவர் மீதும் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கணவனை மனைவி மற்றும் மகன் கொலை செய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...