கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாதக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோரை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.


கோவை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கோவை மண்டல செயலாளர் வகாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலி்ல் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். முன்னதாக பேசிய கலாமணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதாக கூறிய அவர், தொழில் துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளை தொழில் துறையினர் சந்தித்து வருவதாக கூறினார்.

ஆளும் மத்திய, மாநில அரசுகள் இன்று வரை தீர்வு காணாத நிலையில் நாங்கள், இந்த முறையும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். கோவை தடாகம் பகுதியில் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.

பொள்ளாச்சி வேட்பாளர் சுரேஷ் கூறுகையில், பொள்ளாச்சியில் தென்னை நார் தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கு மத்தியஅரசின் தவறான வரிக்கொள்கையே பிரச்சனைக்கு முக்கிய காரணம். ஜி.எஸ்.டி பிரச்சனைகளால் தொழில் பாதிக்கப்பட்டது. போதிய நிதியை வழங்காததால் மாநில அரசும் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது. பிரதான பிரச்சனைகளை முன் வைத்து எங்கள் பிரச்சாரம் இருக்கும் என கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...