வால்பாறையில் ஐந்து இடங்களில் அதிமுக கட்சியினர் தெரு முனை பிரச்சாரம்

தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை எடுத்துக்கூறி அதிமுகவினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முன்னிலையில், நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் வால்பாறை, ரொட்டிக்கடை கருமலை, முடீஸ், சோலையார் அணை, ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு, சிறு குறு நடுத்தர புதிதாக பீக்ஹவர், நிலை கட்டணம் உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு, போன்றவைகளால் மக்கள் அதிக சிரமப்படுகின்றனர் என்று அதிமுக கட்சியினர் மக்களிடம் தெருமுனை பிரசாரத்தில் பேசினார்.



இது காலையிலிருந்து மாலை வரை இந்த ஐந்து இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக பேச்சாளர் புரட்சி தம்பி மற்றும் பி.லட்சுமி காந்த், நகரச் செயலாளர் மயில் கணேசன், தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வி.அமீது, நகரத் துணைச் செயலாளர் பொன். கணேஷ் சலாவுதீன், ஆடிட்டர் சண்முகவேல், எம்.ஆர்.எஸ்.மோகன் சசி, ஐடிவிங் சண்முகம், அரசப்பன் ரொட்டிக்கடை பாபு, ரொட்டிக்கடை ரமேஷ், மஞ்சு பழனிச்சாமி, சீனி ராஜ், லோகேஸ்வரன், பழனியப்பன், ஜான் பீட்டர், விமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...