அப்பநாயக்கன்பாளையத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

அப்பநாயக்கன்பாளையம், சுப்பிரமணியம்பாளையம், உருமாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.


கோவை: கோவை மாவட்ட மக்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், மத்திய அரசு தமிழக மக்களை மாற்றாந்தாய் மனபான்மையோடு நடத்துவதாகவும் கூறி அ.இ.அ.தி.மு. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கினங்க கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பாக பிப்ரவரி 7ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் வார்டு செயலாளர் சாந்தி பூசன் அனைவரையும் வரவேற்றார். பகுதி செயலாளர் வனிதாமணி, கோவை தகவல் தொழில்நுட்ப வடக்கு மண்டல செயலாளர் மணிகண்டன், மருத்துவ அணி செயலாளர் Dr. துரை சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக் கழக பேச்சாளர் மணிமேகலை திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எம் ஆர் நாகராஜ், அம்மா பேரவை துணை செயலாளர் செல்வராஜ், துடியலூர் பகுதி வர்த்தக அணி செயலாளர் முத்து, 1வது வட்டக் கழகப் பிரதிநிதி பழனிசாமி, பொருளாளர் நந்தகுமார், துணைச் செயலாளர் ராஜகோபால், ராமசாமி, பாலாஜி, மோகன்ராஜ், கணேஷ், அண்ணா தொழிற்சங்க துடியலூர் பொதுச் செயலாளர் முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் சுரேஷ்குமார் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். பகுதி செயலாளர் வனிதாமணி எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி பகுடிஹ் செயலாளர் ரமேஷ், ஐ.டி.விங் செயலாளர் அரவிந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக் கழக பேச்சாளர் மணிமேகலை திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.



இக்கூட்டத்தில் பாசறை செயலாளர் நவீன், துடியலூர் பகுதி அவைத் தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், கழக நிர்வாகிகள் செல்வி, வீரப்பன், தேவராஜ் மேஸ்திரி, கருப்புசாமி, பழனிச்சாமி, நடராஜ், மீனாட்சி சுந்தரம், கண்ணன், ஆட்டோ கருணாகரன், இந்திரஜித், நந்தகுமார், தேவகுமார், ஆனந்த், சரவணன், கார்த்தி, சிவக்குமார், ஹபிபுல்லா, ராஜி, சசிகலா, லாவண்யா, ஷாலினி, நாகராஜ், வெள்ளியங்கிரி, மணி, பட்டாளம், ஆறுமுகம், குட்டியம்மாள், கணேசன், துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல் கோவை உருமாண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் வார்டு செயலாளர் பந்தல் வீடு பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். பகுதி செயலாளர் வனிதாமணி, வக்கீல் ராஜேந்திரன் முன்னாள் எம்.பி. யூ.ஆர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக் கழக பேச்சாளர் மணிமேகலை திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.

இக்கூட்டத்தில், சி.டி.சி.செல்வம், எஸ்.ஆர்.ராஜா, சிவமூர்த்தி, நடராஜ், தம்பு மேஸ்திரி, அரவிந்த், ராஜ், கலாவதி, பானுமதி, சிவகுமார், நந்தகுமார், குமார், தாமரைசெல்வம், வெங்கட்சுப்பிரமணியம், ரமேஷ்குமார், அமிர்தம், மலர்விழி, சரோஜினி, யமுனாதேவி, சின்னக்கன்னு, குமார், சாமி வேலுசாமி, ஆனந்த், கோகுல், விஷ்ணு உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...