உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் 31.5.2024 ஆம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் வழங்கப்பட உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீரை பிரதான கால்வாயில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் வழியாக நான்கு மண்டலங்களாக பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் இன்று முதலாம் மண்டலத்திற்கான பாசன நீர் திருமூர்த்தி அணையில் இருந்து இன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இன்று முதல் 31.5.2024 ஆம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் வழங்கப்பட உள்ளது.



திருமூர்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் பிரதான கால்வாயில் திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மடத்துக்குளம் திருப்பூர்-பல்லடம் தாராபுரம் மற்றும் காங்கேயம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.



தண்ணீரை திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார்.

செயற்பொறியாளர் மகேந்திரன், காஞ்சித்துரை, உதவி பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெயக்குமார், முத்துசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



திருமூர்த்தி அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் மொத்தம் 60 அடி கொள்ளளவில் 55.15 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...