ஊராட்சி செயலாளர் இல்லாததால் பள்ளபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மூடல்

பள்ளபாளையம் ஊராட்சிக்கு உடனடியாக ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றர். இந்த நிலையில் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளபாளையம் ஊராட்சிக்கு செயலாளராக நியமிக்கப்பட்ட சரண்யா என்பவர் பல வாரங்களாகவே முறையாக ஊராட்சிக்கு வருவதில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், வட்டார வளர்ச்சிதுறை அதிகாரி சுப்பிரமணியத்திடம் முறைப்படி விண்ணப்பம் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை காரணத்தால் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் ஊராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் கூறும் பொழுது, பள்ளபாளையம் ஊராட்சியில் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வரும் நிலையில் ஊராட்சி செயலாளர் வராத நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் நிரந்தரமாக செயலாளர் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் சுப்பிரமணியத்திடம் முறைப்படி கோரிக்கை மனுவும் அளிக்கபட்டது.

ஆனால் வட்டார வளர்ச்சி துறை அதிகாரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றார். எனவே பள்ளபாளையம் ஊராட்சிக்கு உடனடியாக ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர் நிரந்தரமாக போடவில்லை என்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம் என முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் புகார் கோரிக்கை மனு பதிவு செய்து தபாலில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடுமலை அருகே தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் பள்ளபாளையம் ஊராட்சிக்கு செயலாளர் நியமனம் செய்வதில் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி அலட்சியம் காட்டுவதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...