உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆட்சியர் ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு கான்கிரீட் வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று திடீரென திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இலங்கைத் தமிழர் மறுவாழ் முகாமில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் கூறியாவது, தற்பொழுது முகாமில் கான்கீரிட் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் டைல்ஸ் மற்றும் சமையலறையில் மேசை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ள அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

தெரு விளக்கு சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சித் தலைவர் கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடுமலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...