கோவை காரமடை பகுதியில் போலி மதுபானங்கள் தயாரித்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு பேருக்கும் நேற்று (பிப்.11) வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் சந்தோஷ்குமார் (வயது 42), சத்தியசீலன் மகன் அருண் (வயது 29) ஆகியோரை கடந்த 11.12.2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் மற்றும் அருண் ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த வழக்கு குற்றவாளிகளான சந்தோஷ் குமார், அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று (பிப்.11) வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...