காங்கேயம் 2வது வார்டு பகுதியில் சீராக காவிரி கூட்டு குடிநீர் வழங்கக்கோரி மக்கள் சாலை மறியல்

புதிய காவேரி குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டும் போது ஆழ்துளை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பிரச்சனை ஏற்படுவதாகவும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி 40க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் 2வது வார்டு பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளை குடிநீர் ஆகிய இரண்டுமே கடந்த 10 நாட்களாக வரவில்லை என புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காங்கேயம் பகுதியில் கடந்த சில நாட்களாக அனைத்து சாலைகளிலும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், காங்கேயத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு‌ வருகிறது.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 2வது வார்டு பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காங்கேயம் 2வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும்‌ மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குழாய்கள் அமைக்க அனைத்து சாலைகளிலும் குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. எனவே இந்த சாலைகளில் மக்கள் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும் தற்போது வெய்யில் காலம் துவங்கி வரும் நிலையில் தற்போது தண்ணீர் தட்டுபாடும்‌ ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கேயம் திருப்பூர் சாலையில் 2 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நகராட்சி மூலமாக குடிநீர் பைப் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடவில்லை என்றும், ஏற்கனவே இருந்த குழாய்களின் உடைப்பை சரிவர செய்யாததால் குடிநீர் அப்பகுதிக்கு வரவில்லை என்றும் மக்கள் குற்றசாட்டியுள்ளனர்.

புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மந்தநிலையில் நடைபெற்றுவருவதாகவும் குற்றசாட்டு முன்வைக்கின்றனர். அந்தந்த பகுதிகளிலேயே ஆழ்துளை கிணறுகள் மூலமாக நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்கிவந்தது. தற்போது புதிய காவேரி குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டும் போதும் ஆழ்துளை குழாய்களிலும் உடைப்பு ஏற்படுவதாகவும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால் கண்டுகொள்ளவில்லை என 40க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனை அடுத்து காங்கேயம் திருப்பூர் சாலையில் சிறிது நேரம் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காங்கேயம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு பொதுமக்களை அப்புறப்படுத்தி பின்னர் நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கேயம் நகராட்சி ஆணையர் கனிராஜ் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினார். இதனை அடுத்து பொதுமக்கள் கோரிக்கைகள் உடனடியாக சரிசெய்து தருகிறேன் என கூறியதன் பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...