காங்கேயம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் உதவி - சமூக வலைத்தளங்களில் பாராட்டு

காங்கேயம் ஹாஸ்டல் பஸ் ஸ்டாப் அருகே நேற்று நள்ளிரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த மூன்று பேரை மீட்டு, அவ்வழியாக சென்ற அமைச்சர் சாமிநாதன் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு ரூ.1.120 கோடியே 57 லட்சம் மதிப்பிலான 4வது குடிநீர் திட்டம் தொடக்க விழா நேற்று காலை திருப்பூர் சிக்கன அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் முன்னிலை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4வது குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நேற்று திருப்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த விழா முடிவடைந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு திருப்பூரிலிருந்து கிளம்பிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது காங்கேயம் திருப்பூர் ரோடு ஹாஸ்டல் பஸ் ஸ்டாப் நிறுத்தம் அருகே இரவு 11 மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் காயமடைந்து சாலையில் கிடந்தனர்.



இதை பார்த்த தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர்கள் குறித்து விசாரணை செய்ததில் பிரகாஷ் (30) மற்றும் பார்த்திபன் (30) இவர்கள் இருவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு இரு சக்கர வாகனமானது காங்கேயம் சக்தி நகர் சேர்ந்த யுவராஜ் (55) என்பதும் தெரியவந்தது. உடனடியாக அமைச்சர் மூலமாக காயம்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இந்த விபத்தை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் விபத்து நடைபெற்றதும் அந்த வழியாக அமைச்சர் கார் வருவதும், அவர் இறங்கி உதவி செய்வதையும் தங்களுடைய செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனைப்பார்த்த மக்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் செயலை பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...