உடுமலை திருமூர்த்தி மலை சுற்றுலா தளத்தில் படகு இல்லம் - மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு

சுற்றுலா தலங்களில் அணை பூங்கா உருவாக்குதல் மற்றும் படகு இல்லம் செயல்படுத்துதல் குறித்து மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்தகுமார் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அணை பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இந்த சுற்றுலா தலங்களில் அணை பூங்கா உருவாக்குதல் மற்றும் படகு இல்லம் செயல்படுத்துதல் குறித்து மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்தகுமார் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.



திருமூர்த்திமலை அணைப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகிய தோற்றத்தில் அமைந்துள்ளது. திருமூர்த்திமலை அணைப் பகுதியை ஒட்டி 2700 மீட்டர் நீளம் கொண்ட நிலத்தில் ஒரு அழகிய அணை பூங்கா அமைக்க நீர்வளத் துறை பல வருடங்களாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்காவை அமைக்க திட்ட கருத்து நீர்வளத்துறை மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருமூர்த்தி மலைப்பகுதியில் அணை பூங்கா அமைப்பதற்கு நீர்வளத்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்வளத் துறை மூலம் அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்ட திட்ட கருத்துருவின் படி அரசின் நிதி உதவி கிடைக்காமல் இருந்தாலோ, காலதாமதம் ஏற்பட்டாலோ, அணைபூங்காவை அமைக்க சுற்றுலாத்துறைக்கு திட்டக் கருத்துருவை சமர்ப்பிக்குமாறு நீர்வளத் துறை அதிகாரிகளிடம் மாவட்ட சுற்றுலா அலுவலர் அறிவுறுத்தினார்.

அவ்வாறு சுற்றுலாத்துறைக்கு திட்ட கருத்துரு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அரசின் கவனத்திற்கு இந்த திட்டத்தை கொண்டு சென்று நிதியுதவி பெற்று சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அழகிய அணை பூங்காவை அமைத்திட சுற்றுலாத்துறை சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகளிடம் திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த குமார் தெரிவித்தார்.

மேலும் திருமூர்த்திமலையில் முன்னர் செயல்பாட்டில் இருந்த படகு இல்லம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படகு இல்லம் தற்போது ஏன் செயல்படவில்லை என்று தளி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டார். போதுமான அளவு லாபம் அளிக்காமல் தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தியதால் 2008 ஆம் ஆண்டிலிருந்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்று கூறினார்கள்.

மீண்டும் அந்த இடத்தில் படகு இல்லம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக மாவட்ட சுற்றுலா அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் மீண்டும் படகு இல்லம் அமைப்பதற்கு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழு நிர்வாகிகள் S.M. நாகராஜ், சத்யம் பாபு, நவீன், தளி பேரூராட்சித் தலைவர் கல்பனா, நீர்வளத்துறை அலுவலர் கருணாகரன் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...