கோவை செல்வபுரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.


கோவை: கோவை, செல்வபுரம், 78-வது வார்டு இந்திரா நகரில் பொது இடத்தை ஆக்கிரமித்து திட்டுகள் கட்டியிருப்பதாகவும், வழித்தடங்களை மறித்துள்ளதாகவும் அப்பகுதியினா் மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் கடந்த வாரத்தில் மனு அளித்தனா்.



இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அந்த இடம் பொது பயன்பாட்டுக்கான இடம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, நேற்று (பிப்.12) மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...