கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல்

மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காலி உடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடவும், அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையிலும் இந்த பிரத்தியேக ஊஞ்சல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கோவை: சமத்துவமும் சந்தோசமும் இச்சமுதாயதில் அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் கோயம்புத்தூர் ராயல்ஸ் ரோடராக்ட் கிளப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக ஊஞ்சல் ஒன்றை கோயம்புத்தூர் ரேஸ் கோர்சில் அமைத்துள்ளனர்.



இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது சக்கர நாற்காளியுடன் சேர்ந்து ஊஞ்சலில் ஏறி ஆடலாம். அவர்களும் மற்ற குழந்தைகளை போலவே ஊஞ்சல் ஆடும் சந்தோசத்தை அனுபவிக்கும் வகையில் இந்த பிரத்தியேக ஊஞ்சலை வடிவமைத்து உள்ளனர்.

"நாம் சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் ஒருங்கிணைத்து வாழ, இந்த விசேஷமான ஊஞ்சல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று ரோடரக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் பிரேசிடென்ட் நந்தினி ராஜா தெரிவித்தார்.

"மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளை போலவே இயல்பாக நடமாட இந்த ஊஞ்சல் நம் சமுதாயத்தில் ஒரு முதற்படியாக அமையும். இந்த அழகான முயற்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என ரோடராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல்ஹின் செயலாளர் தீனதயாளன் கூறினார்.

ரேஸ் கோர்ஸ், இன்டிகோ டீ ஹவுஸ் எதிரில் நடந்த இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் பொது மேலாளர் பாஸ்கர் சீனிவாசன் கலந்துகொண்டு இந்த பிரத்தியக ஊஞ்சலை திறந்து வைத்தார்.



இந்த திருவிழாவில் ரோடராக்ட உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...