கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேன்சி கடையில் தீ விபத்து

தீ விபத்தில் பேன்சி கடைக்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் கருகி தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள துடியலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தொப்பம்பட்டி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பேன்சி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று (பிப்.12) இரவு வழக்கம் போல் கடையின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.



இதனைப் பார்த்து அக்கம்பக்கதினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பேன்சி கடைக்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள துடியலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...