ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீமதி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து திருட்டு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியோடு குற்றவாளியை தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேதிற்கு இடமான நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (38) என்பதும், இவர் மீது மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்றம் மற்றும் திருட்டு செயல்களில் ஈடுபட்ட 15 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 56 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, மதுரை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பல குற்றங்களில் ஈடுபட்டு 15 வழக்குகளுக்கு மேல் உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்ததாகவும், தற்போது அவருக்கு பணம் தேவை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு யாரும் இல்லாத வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என்றும், பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த கோட்டூர் மற்றும் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டுகளை தெரிவித்து சன்மானம் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...