தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அஸ்ஸாம் மாநில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி முன்னிலையில் CO5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகத்தினை வணிக ரீதியான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்காக கையொப்பமானது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அஸ்ஸாம் தீவனப்பயிர் இயக்கத்தின் உதவியின் கீழ் அஸ்ஸாமில் உள்ள இரண்டு நிறுவனங்களான பிரான்பந்து தாஸ் நிறுவனம் மற்றும் இரஃபிக் அலி குழுமத்துடன், 09.02.2024 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி முன்னிலையில் CO5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகத்தினை வணிக ரீதியான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்காக கையொப்பமானது.

CO 5 கம்பு நேப்பியர் வீரிய ஒட்டு புல் இரகமானது, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும் தீவனப்பயிர் துறை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, அகில இந்திய அளவில் 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.



இந்த வீரிய ஒட்டு இரகமானது கால்நடை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த வீரிய ஒட்டு இரகம் அதிக தீவன உற்பத்தித்திறன், அகலமான இலைகள், மிருதுவான தண்டுகள், அதிக புரதச்சத்து (14%), குளிரைத் தாங்கி வளர்தல், விரைவில் தழைத்து வளரக்கூடிய தன்மை மற்றும் ஆண்டு முழுவதும் சீரான தீவன மகசூல் தரக்கூடிய தன்மை கொண்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர், முனைவர் இரா.தமிழ்வேந்தன் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் பிரான்பந்து தாஸ் குழுமத்தின் சார்பாக பிரான்பந்து தாஸ், இரஃபிக் அலி நிறுவனத்தின் சார்பாக முகமது இரஃபிக் அலி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.ரவிகேசவன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரக பேராசிரியர் முனைவர் எஸ்.சுந்தரேஸ்வரன், தீவனப்பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.புஷ்பம், தீவனப்பயிர் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...