கோவை TNAU-வில் சிறு தானியங்களில் இருந்து உணவு தயாரிக்கும் 2 நாள் பயிற்சி

சிறு தானியங்களில் இருந்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனை பொருட்கள், உடனடி தயார் நிலை உணவுகள் தயாரிப்பதற்கான பயிற்சிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட உள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறு தானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (பிப்.15 மற்றும் பிப்.16) ஆகிய 2 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் சிறு தானியங்களில் இருந்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனை பொருட்கள், உடனடி தயார் நிலை உணவுகள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ரூபாய் 1770 பயிற்சி கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641003 மற்றும் 0422-6611268, 94885-18268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் நேற்று (பிப்.12) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...