மஞ்சூர் சாலையில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம் - பயணிகள் அச்சம்

மஞ்சூர் சாலை வழியாக நேற்று(பிப்.13) சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது.


கோவை: கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்ல 3-வது வழித்தடமாக மஞ்சூர் சாலை இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இச்சாலை உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.



இந்நிலையில் நேற்று(பிப்.13) அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...