கோவையில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் சார்பாக காதலர் தினம் கொண்டாட்டம்

கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும், ஆவணப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.


கோவை: பிப்ரவரி 14 என்றாலே நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். இந்த நாளில் காதலை வெளிப்படுத்துவதும், வெளிப்படுத்திய காதலுக்கு அங்கீகாரமாக திருமணம் செய்து கொள்வதும் ஆங்காங்கே நடக்கும்.

இந்த நிலையில் கோவையில் புதிதாக காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் உட்பட, காதலுக்கு ஆதரவாக இருப்போர் ஒன்றிணைந்து, காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், அந்த இயக்கத்தின் முக்கிய கிளை அமைப்பான கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் சார்பாக, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், பெரியாரிய உணர்வாளர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டினர்.

இந்த பெரியார் படிப்பகத்தில் சாதி மத பேதமின்றி, 8,000 மேற்பட்ட சாதி மறுப்பு கலப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன.



அவ்வாறு காதலர் திருமணம் செய்து கொண்டவர்களே, கேக் வெட்டி கொண்டாடி, சாதி மத பேதம் ஒழிய காதல் செய்வீர் என முழங்கினர்.



முழக்கத்தின் வாயிலாக, இட ஒதுக்கீட்டுக்கான உரிமை, ஆனவபடுகொலைக்கு எதிராக குழுமிய காதல் தம்பதிகள் உட்பட அனைவரும் முழங்கினர்.

கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும், ஆனவபடுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். காதல் என்பது சமூகத்தில் இயல்யான இயற்கையான உணர்வு. அவ்வாறு காதல் செய்து மனம் முடித்தவர்களுக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு, அங்கீகாரம் தர அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...