பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடல் குழு நீக்க மாத்திரை பற்றி தாய்மார்களுக்கு விளக்கம்

குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகையை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது என காணொளி மூலம் விளக்கப்பட்டது.


கோவை: தேசிய குடல் குழு நீக்க நாள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் கொண்டாடப்பட்டது.



குழந்தைகள் நலப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வராஜ் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் அமுதா, செவிலியர் ராணி, கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



இதில், சிகிச்சைக்கு வந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன் நன்மைகள் விளக்கப்பட்டது. குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது.



அதிக ரத்த சோகை உள்ள பெண்கள் கடைசி கட்டத்தில் பிரசவத்துக்கு வரும்போது உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு கூட அபாயம் உள்ளது. ரத்தசோகை இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு ரத்த சோகை உள்ளது. இதை தடுப்பதற்காக வளரும் இளம் பெண்களுக்கு வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் பள்ளிகளில் கொடுக்கப்படுகிறது.

இரண்டு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கலாம். இவை அனைத்தும் காணொளி மூலம் விளக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...