காலா பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடித்து கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்

காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை: காலா' பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கவர்னர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை புறக்கணித்து வெளியே சென்றார்.

இதற்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அவையில் இருந்து வெளியேறிய கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக, மணிக்கூண்டு, உக்கடம், ரயில் நிலையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...