உக்கடம் புல்லுக்காடு சூப்பர் கார்டன் பகுதியில் ரூ.9.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த மேயர்

கோயம்புத்தூர் வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், அம்பாள் நகரில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 86க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு சூப்பர் கார்டன் பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.9.44 லட்சம் மதிப்பீட்டில் 100 கிலோவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (பிப்.14) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், அம்பாள் நகரில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவதாஸ், உதவி பொறியாளர் சென்ராம், உதவி பொறியாளர் அப்சல் பத்தா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...