பொகலூரில் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கண் கண்ணாடிகளை வழங்கிய கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொகலூர் தாழத்துறை ஸ்ரீ சக்தி மினி ஹாலில் நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.



உடன் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர்.ஆர்.வீரமணி, சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.எஸ்வி.பாலசுப்பிரமணியம், டைட்டன் நிறுவன மேலான் இயக்குனர் சி.கே.வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர்.

இதனிடையே, அன்னூர் வட்டம், பசூர் ஊராட்சியில் (பிப்.14) மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...