மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தனித்திறன் போட்டியில் உடுமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிநிதா முதல் இடம்

சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.


திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட சிறுசேமிப்பு துறை சார்பில் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

மாணவி ஹரிநிதாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயா, உதவி தலைமை ஆசிரியர்கள் அ.ஜெயராஜ், தி.மஞ்சுளா, இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஆங்கில ஆசிரியர் பூமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...