உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் - 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து உள்ளதால் கிராமங்களில் நடைபெறுகின்ற பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசினர்.


திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சிபாய்(வ.ஊ), சுப்பிரமணியம்(கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர 28 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் 26 தீர்மானங்கள் பல்வேறு செலவினங்கள் குறித்தும், 27-வது தீர்மானத்தில் கிராமங்களில் கல்வெட்டு, கான்கிரீட் சாலை, ஓரடுக்கு தார் சாலை, சிமெண்ட் சாலை, மழை நீர் வடிகால், சின்டெக்ஸ் அமைத்தல் மற்றும் தேவனூர் புதூர் ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இடம் பெற்றிருந்தது.

28-வது தீர்மானமாக புதிய ஒப்பந்ததாரர்கள் அனுமதிக்க கோரப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து உள்ளதால் கிராமங்களில் நடைபெறுகின்ற பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிஞ்சேரி கிராமத்தில் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற்று தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதை அதிகாரிகள் ஆய்வு செய்து தவறாக பயன்படுத்தும் குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள கூட்டத்திற்கான பயணப்படியை வழங்குவதற்கு முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...