உடுமலை அருகே குருமலை பகுதியில் மலை கிராமத்தில் சிறப்பு ஆதார் சேவை முகாம்

ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது எனவும், இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனவும் மலைவாழ்மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்குள்ள பொறுப்பாரு, கோடந்தூர், ஆட்டுமலை, தளிஞ்சி, தளிஞ்சி வயல், குருமலை, குலிப்பட்டி, மேல்குருமலை, காட்டுப்பட்டி, கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டை புதிதாக எடுத்தல், திருத்தம், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்காக உடுமலை பகுதிக்கு வரவேண்டிய சூழல் இருந்தது. இதற்காக அடர்ந்த வனப்பகுதியில் உயிரை பணயம் வைத்து பயணித்து அடிவார பகுதிக்கு வருகை தந்து வாகனத்தை பிடித்து உடுமலைக்கு வர வேண்டிய நிலை இருந்தது.

அதுவும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருந்தது. இதனால் ஆதாரை மையமாகக் கொண்ட பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ் பெறுவதிலும் தடங்கல்கள் நிலவி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து மலைவாழ் கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் குருமலை பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. நாளை குலிப்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் நாங்கள் பெருத்த சிரமத்துக்கு இடையில் உடுமலைக்கு சென்று வர வேண்டிய நிலை மாறி உள்ளது.அதுமட்டுமின்றி வயதானவர்கள் குழந்தைகள் எளிதாக பதிவு செய்ய முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...