மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த உடுமலை-மூணாறு சாலையை பராமரிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பருவமழை தீவிரமடைந்த போது வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறமும் மண்அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து. அதை சீரமைக்க விடுத்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்வதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் வாகன போக்குவரத்தும், மலைவாழ் மக்களும் சமவெளி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

பருவமழை தீவிரமடைந்த போது வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறமும் மண்அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து. அதை சீரமைக்க விடுத்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், அதிக அளவுடைய போக்குவரத்தைக் கொண்ட உடுமலை-மூணாறு இரண்டு புறத்தையும் மண்ணை கொட்டி சீரமைப்பதற்கு முன்வராதது வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விலகிச் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் திடீரென வாகனங்களை சாலை விட்டு இறங்கும் போது பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுகிறது.

வனவிலங்குகள் நடமாட்டம் உடைய தற்போதைய சூழலில் வாகனங்கள் பழுது அடைந்ததால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அத்துடன் புங்கன்ஓடை அருகே சாலையின் இரண்டு புறங்களிலும் புதர் முளைத்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

எனவே உடுமலை-மூணாறு சாலையில் இரண்டு புறங்களிலும் மண்ணை கொட்டி சீரமைப்பதுடன் புங்கள் ஓடை பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...