வீரோ கே வீர் இந்தியக் கட்சி 2024ல் எம்.பி தேர்தலில் தனித்து போட்டியிடும் என கோவையில் நிர்வாகிகள் அறிவிப்பு

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் தெரிவித்தார்.


கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக "வீரோ கே வீர்” இந்தியக் கட்சி 2024ல் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 543 இடங்களிலும் ஓய்வு பெற்ற முப்படை இராணுவ வீரர்கள் எம்.பி வேட்பாளர்களாக போட்டியிட இருக்கிறார்கள். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று(பிப்.14) காலை கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது.



இது குறித்து, வீரோ கே கேர் கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் கூறுகையில், தேசமும், அதன் நாட்டு மக்களும் இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்களைப் பற்றி முற்றிலும் பெருமை பாராட்டுகிறார்கள். ஏனெனில் இராணுவ வீரர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், உண்மையுள்ளவர்கள், ஒழுக்கமானவர்கள், படித்தவர்கள்.

2024ல் தேர்தலில் போட்டியிடும் 'வீரோ கே வீர்" இந்திய கட்சி இந்தியாவை வலிமையான மற்றும் வளர்ந்த தேசமாக உருவாக்க வேண்டும். இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்கள் நாட்டிற்கு தங்களின் வாழ்வின் பொற்காலத்தைக் கொடுத்துள்ளார்கள், எனவே முப்படை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே நாட்டின் பொன்னான நேரத்தைக் கொண்டு வர முடியும்.

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர எம். பி. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...