ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என்ற தலைப்பில் சரவணம்பட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா என குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரித்தொகையில், ஒரு ரூபாய்க்கு வெறும் 26 பைசா மட்டுமே வழங்கியது. ஆனால், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா மற்றும் உத்திரபிரதேச அரசுக்கு கொடுக்கும் ரூ.2.73 என குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.



இந்த போஸ்டர் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...