வடவள்ளியில் திமுக சார்பில் மறைந்த மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்துலட்சுமிக்கு அஞ்சலி

வடவள்ளியில் உள்ள முத்துலட்சுமிக்கு இல்லத்திற்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., நேரில் சென்று அவரது உடலுக்கு, மலர் மாலை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் கே.முத்துலட்சுமி மறைவையொட்டி, வடவள்ளியில் உள்ள ‌அவரது இல்லத்திற்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., நேற்று (பிப்.14) நேரில் சென்று அவரது உடலுக்கு, மலர் மாலை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

உடன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, பொதுக்குழு உறுப்பினர்கள் ச.குப்புசாமி, தங்கம் சந்திரசேகர், வட்டக்கழகச் செயலாளர்கள்‌ மற்றும் கழக நிர்வாகிகள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...