திருப்பூரில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சலுகை மீண்டும் வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும், அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களை நிரப்பி பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு 26 ஆம் தேதிக்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...