தண்ணீர் வரத்து குறைவால் இன்று முதல் கவியருவி மூடல் - வனத்துறை அறிவிப்பு

அருவிகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் வரும் போது கவியருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள குரங்கு அருவி என்ற கவியருவி சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக விளங்கி வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வறட்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் ஆழியார் கவியருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளதால், வனத்துறை சார்பில் கவியருவியை மூட உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று (பிப்.15) முதல் ஆழியார் கவியருவி மூடப்பட்டது.

மீண்டும் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் வரும் போது கவியருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து அறியாமல் வந்து சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி உடன் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...