மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

முப்பெரும் விழாவில் உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும், கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என மாணவர்களுக்கு கருத்துக்களை கூறினார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிறைவிழா, விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.

மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் பத்ரி நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என கருத்துக்களை கூறினார்.



மேலும் நீதிபதிகள் விஜயகுமார், பாலமுருகன், மீனாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவரும், வழக்கறிஞர் அரசு வழக்கறிஞருமான டி.ஆர். மனோகரன் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார்.

எஸ்.எம்.சி. தலைவர் கவிதா மற்றும் உறுப்பினர்கள் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மடத்துக்குளம் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். இலக்கியம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

100 சதவீதம் வருகை புரிந்தோர், அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு மேல்நிலைப்பள்ளி மடத்துகுளத்திற்கு அருகில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டு இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கி கௌரவத்தினர். இதில், மாணவர்களின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக பட்டதாரி ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...