கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூல்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு உற்சவ காலத்தை முன்னிட்டு மே மாதம் வரை செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து செல்ல கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம். இந்த நடைமுறை இந்த ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...