உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு

கிணற்றுக்குள் தவறி விழுந்து மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை, தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குரல்குட்டை ஊராட்சி உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள திறந்தவெளி கிணற்றில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்(35)என்பவர் தவறி விழுந்து விட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ரா.லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் குரல்குட்டைக்கு விரைந்தனர்.

பின்னர் கிணற்றுக்குள் இறங்கி மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் குரல் குட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...