உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கல்பனா சாலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. மாவட்ட, மாநில, ஊரக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் மைதானத்திற்கு பயிற்சிக்கு வருகின்றனர்.



அவர்களுடன் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மைதானத்தில் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷஜந்துக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்பு மைதானத்தில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை. இதனால் பார்த்தீனியம் செடிகள் நீண்டு வளர்ந்து விதைகளை தூவி இனத்தை பல்கி பெருக்கி மைதானத்தை ஆக்கிரமித்து வருகிறது.



செடிகள் வெளியிடும் மகரந்தம் மற்றும் விதைகள் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை கொண்டதுடன், உடல் மீது படும் போது ஒருவிதமான அரிப்பு மற்றும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது. இது குறித்து பள்ளி நிர்வாகமும் கவனிப்பதில்லை. இதனால் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, உடற்பயிற்சி மேற்கொள்ள வருகின்ற பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் செடிகளை கடந்து செல்கையில் உடல் நலக்கோளாறால் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.

மைதான பராமரிப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட எதிர்கால விளையாட்டு வீரர்களை உருவாவதை சமுதாயம் இழக்க நேரிடும். எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...