உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்சனை பூஜை

ரதசப்தமி நாளையொட்டி சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.


திருப்பூர்: உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சார்ச்சனை நடக்கிறது. ரதசப்தமி நாளையொட்டி நெல்லுக்கடை வீதியில் உள்ள பூமி நீள நாயகி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சாரசனை வழிபாடு நடக்கிறது.

இன்று காலை 7 மணிக்கு மகா சங்கல்பம், வாசுதேவ புண் யாகம் மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பஞ்சோபநிஷத் ஹோமம் நடந்தது. நாளை காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மாலை 5 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம் பூர்த்தியாகிறது.

நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...