பொள்ளாச்சியில் புனரமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்தார் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் என்று நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக ஒரு கோடியை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மின்மேட்டர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று பணியில் முடிவுற்றது சுத்திகரிப்பு நிலையத்தை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கமிஷனர் சுப்பையா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர மன்ற தலைவர், கடந்த 10 ஆண்டுகளில் பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.



இதனால் குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சூழல் நிலவியது. திமுக அரசு பொறுப்பேற்றுடன் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் மோட்டார்கள் வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...