கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - உள்ளூா் விடுமுறை அளிக்க எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு கோரிக்கை

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை ஆட்சியரிடம் எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் கோனியம்மன் கோயில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்க வலியுறுத்தி எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு சார்பில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று (பிப்.15) மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வா். மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களின் தோ்த் திருவிழாவின்போது உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், கேரளத்தில் பிரபல பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேபோல, கோவையின் முக்கிய கோயிலான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...