பட்டா பெற்றும் 23 வருடங்களாக குடியேறாமல் இருந்த இருகூர் கிராம மக்களை குடியேற வைத்த கம்யூனிஸ்ட் கட்சியினர்

23 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளர்களின் பட்டியலை கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் மாலதி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் முருகன், சர்வேயர் கணேசன் ஆகியோர் தலைமையிலான குழு இருகூர் சமுதாய நலக்கூடத்தில் பயனாளர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர்.


கோவை: கோவை மாவட்டம் இருகூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்கள் சுமார் 244 பேருக்கு கடந்த 2001 ஆம் வருடம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இலவச வீட்டு மனை வழங்கப்பட்ட இடம் தங்களுக்கு சொந்தம் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து கொண்டே இருந்தனர்.



ஆனால் இவற்றையெல்லாம் இருகூர் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் இணைந்து 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு நீதிமன்றங்களில் இருந்த வழக்கை முடித்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த வீட்டுமனை பட்டாக்கள் உரிய இடம் அவர்களுடையதுதான் என்று நிரூபித்தனர்.

கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளர்களின் பட்டியலை கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் மாலதி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் முருகன், சர்வேயர் கணேசன் ஆகியோர் தலைமையிலான குழு இருகூர் சமுதாய நலக்கூடத்தில் பயனாளர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர்.



விரைவில் அவர்களுக்குரிய இடத்தை மீட்டுக் கொடுத்து அதில் அவர்களை குடியேற வைப்பதே எங்களுடைய நோக்கம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் யூ கே சிவஞானம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், இருகூர் பேரூராட்சி 8வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் குமார், வழக்கறிஞர் ராமர், இருகூர் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிஐடியு தலைவர் விஜயராகவன், செயலாளர் பிரகாஷ், குருசாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு உதவி செய்தனர். விரைவில் தங்களுக்குரிய கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...