தேசிய அளவிலான குவான் கி டோ போட்டியில் சாதனை புரிந்த கோவை மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

மொரோக்கோவில் ஏப்ரல் மாதம் உலக அளவிலான குவான் கி டோ போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கே தமிழக அரசு உதவ வேண்டும் என்று தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்று கோவை திரும்பிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தேசிய அளவிலான ஐந்தாவது குவான் கி டோ சாம்பியன் சிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 20 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து 25 மாணவர்களும், அதில் கோவை மாவட்டத்தில் இருந்து மட்டும் ஏழு மாணவர்கள் கலந்து கொண்டு மொத்தம் 20 தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்கள் ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளனர். அதில் இரண்டு பேர் கோவை அரசு பள்ளி மாணவர்கள் ஆவர்.

மேலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்கள் மொரோக்கோவில் ஏப்ரல் மாதம் உலக அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பதக்கங்களை வென்று இன்று (பிப்.16) திரும்பிய கோவை மாணவர்களுக்கும் பயிற்சியாளர் அமிர்தராஜ் க்கும் ரயில் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய அரசு பள்ளி மாணவி இன்ஷிகா, தாங்கள் மொரோக்கோ செல்வதற்கு தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...