அதிமுகவுக்கு நிரந்தர எதிரி திமுக தான் - கோவையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை. அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது என முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜைகள் மற்றும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து குடிநீர் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை, அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது.

அதே நடைமுறையை திமுக பின்பற்ற வேண்டும். அதிமுகவை பொருத்தவரை திமுக என்ற கட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுகவுக்கு திமுக நிரந்தர எதிரி தான் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...