தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.28 கோடி மதிப்பிலான சாலை விரிவுபடுத்தும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், கோவைப்புதூர், சுண்டக்கமுத்தூர், ஆறுமுககவுண்டன்புதூர், நரசிபுரம், தென்னமநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.28 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவுபடுத்தும் பணிக்கான பூமிபூஜையை துவக்கி வைத்து இரண்டு உயர்மட்டப்பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை விரிவுபடுத்துவதற்கான பூமி பூஜை மற்றும் கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் புதிய திட்டப்பணிகளுக்கான பூமிபூஜையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சேலம் - கொச்சின் சாலையில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணியினையும், மேலும், 162/10 ஓடையின் குறுக்கே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சிறிய பாலம் கட்டுவதற்கும், 87 வது வார்டு பகுதியில் அரசு பொது நிதியிலிருந்து 11.82 கோடி மதிப்பில் பாலக்காடு சாலை, புட்டுவிக்கி இணைப்பு சாலை, தடுப்புச்சுவருடன் அமைப்பதற்கும், சேலம் கொச்சின் சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பால்தளம் அமைப்பதற்கும் பூமிபூஜையினை துவக்கி வைத்தார்.

மேலும் இதேப்போன்று, கோவைப்புதூர் சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடத்தை மூன்று வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கும், குனியமுத்தூர் முதல் சுண்டக்காமுத்தூர் வரை உள்ள சாலையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கும், சுண்டக்காமுத்தூர் சாலையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கும், சுண்டக்காமுத்தூர் முதல் நரசிபுரம் சாலையில் ரூ.1.30 கோடி மதிப்பில் சாலைகளை பயன்படுத்துவதற்கும், மேலும் நரசிபுரம் சாலையை ரூ.1.30 கோடி மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் சிறுபாலம் கட்டும் பணிக்கும் பூஜையினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இதேப்போன்று, நரசிபுரம் சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை விரிவுபடுத்தும் பணிக்கும், வெள்ளருக்கம்பாளையம் சாலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப்பணிக்கும், சிறுவாணி முதல் நரசிபுரம் சாலையில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் ஒருவழித்தடத்தை இருவழித்தடமாக மாற்றுவதற்கான பணிக்கும் என மேலும் சில பணிகளுக்காக அமைச்சர் பூமி பூஜையினை துவக்கி வைத்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்டப்பாலத்தினையும், வடிவேலம்பாளையம் நாதேகவுண்டன்புதூர் பகுதியில் ரூ.81.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட உயர்மட்டப்பாலத்தையும், அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்ததுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார், ரூ.27 கோடி அளவிற்கு புதிய பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். 

பின்னர், குளத்துப்பாளையம் பகுதியில் வருவாய் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.93 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர்கள் (பேரூராட்சி) கணேஷ்ராம், (ஊராட்சிகள்) கருப்பையா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...